Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, October 4, 2026

BSNLCCWF 5வது அகில இந்திய மாநாடு


ஒப்பந்த ஊழியர்களின், அகில இந்திய சம்மேளமான, BSNLCCWF சம்மேளனத்தின், 5வது அகில இந்திய மாநாடு, 03.10.2026 அன்று, புதுடெல்லி ஹர் கிஷன் சிங் சுர்ஜீத் பவனில், வெகு சிறப்பாக நடைபெற்றது. நமது TNTCWU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக, தோழர்கள் M. செல்வம், DS மற்றும் சுரேஷ், TCD., சார்பாளர்களாக, கலந்து கொண்டனர். 

மாநாட்டின் முடிவில் சம்மேளனத்தின், புதிய தலைவராக, தோழர் தபஸ் குமார் கோஷ், பொதுச் செயலாளராக தோழர் P.அபிமன்யு, பொருளாளராக தோழர் M.ஸ்ரீதரசுப்ரமணியன் ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து, தோழர் M.சையது இத்ரீஸ் துணைத் தலைவராகவும், தோழர் C. பழனிச்சாமி உதவி பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும், BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்