BSNL ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், 3வது ஊதிய மாற்றம் உடனடியாக வழங்கிட வலியுறுத்தி, நாடு முழுவதும், 01.10.2026 அன்று மாநில தலைமையகங்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகத்தில், உண்ணா நோன்பு போராட்டம் நடத்தவும், நிர்வாகம் சார்பாக திட்டமிடப்பட்டுள்ள, 26வது BSNL அமைப்பு தின கொண்டாட்டங்களை புறக்கணிக்கவும், உண்ணா நோன்பு போராட்டத்திற்கு ஆதரவாக, மாவட்ட தலைநகரங்களில், உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தவும், மத்திய AUAB, அறைகூவல் கொடுத்திருந்தது.
அதே போல், ஓய்வூதியர்கள் பெற்று வந்த ரூ1000, FMA தொகை, 01.10.2026 முதல் திடிரென நிறுத்திய, BSNL நிர்வாகத்தை கண்டித்து, CBMPA என்கிற பதாகையின் கீழ், AIBDPA, AIBSNLPWA, SNPWA ஓய்வூதியர்கள் அமைப்புகளும், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த, அறைகூவல் கொடுத்திருந்தது.
இரண்டு நிகழ்ச்சிகளையும் இணைத்து, AUAB - CBMPA சார்பாக, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், 01.10.2026 அன்று, உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், 200க்கும் மேற்பட்ட தோழர் தோழியர்கள் பங்கேற்போடு, வெகு சிறப்பாக நடைபெற்றது.




















