Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, October 7, 2026

ஓய்வூதியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!


ஓய்வூதியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த, ரூ1000 மருத்துவ படியை, 01.10.2026 முதல் திடீரென நிறுத்திய கார்ப்பரேட் நிர்வாகத்தை கண்டித்து, ஓய்வூதியர் அமைப்புகள், CBMPA பதாகையின் கீழ்,  நாடு முழுவதும், 09.10.2026 அன்று, கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுத்திருந்தது. 

அதன்படி, சேலம் மாவட்ட AIBDPA - AIBSNLPWA - SNPWA சங்கங்கள் சார்பாக, 09.10.2026 அன்று, சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில், 150க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட, சக்திமிக்க உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், நடைபெற்றது. BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக போராட்டத்தை வாழ்த்தினோம்.