Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, August 5, 2026

OUTSOURCING முறை - வியாபாரம் பாதிக்கும்.


OUTSOURCING முறை மீதான சார்பு தன்மையை, BSNL அதிகரித்துக் கொண்டே போவதால், அதன் வியாபாரம் பாதிக்கும். BSNLலின் வெளிப்புற சேவையின் பராமரிப்பு மற்றும் விரிவாக்க பணிகளை OUTSOURCE செய்வதற்கு, BSNL கார்ப்பரேட் அலுவலகம், அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது.  BA மற்றும் மாநிலங்கள் சீரமைக்கப்படுவதன் பின்னணியில், இது மேலும் கூடுதலாகிறது. இலாகாவில் உள்ள நிரந்தர ஊழியர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஒப்பந்த ஊழியர்களை திறம்பட பயன்படுத்துவதற்கு பதிலாக, OUTSOURCING முறைமைகளை, BSNL நிர்வாகம் அதிகமாக நம்புகிறது. 

இது BSNLலின் வலைத்தளம், சேவையின் தரம் மற்றும் சந்தை பங்கீட்டை கடுமையாக பாதிக்கும் என BSNLEU கருதுகிறது. இது தொடர்பாக, OFC கேபிள் பராமரிப்பு பணிகளை OUTSOURCINGகிற்கு மாற்றி அமைக்கப்பட்ட கொள்கை வழிகாட்டுதல்களை, கார்ப்பரேட் நிறுவனம், 31.07.2026 அன்று வெளியிட்டுள்ளது. இது போன்ற முக்கியமான கொள்கை முடிவுகளை அமலாக்குவதற்கு முன், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களோடு விவாதிக்கப்பட வேண்டும் என, BSNLEU உறுதியாக கருதுகிறது.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள் 

கார்ப்பரேட் அலுவலக கடிதம் காண இங்கே சொடுக்கவும்