Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, August 4, 2026

அங்கீகார காலம் நீட்டிப்பு !

 

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின், அங்கீகார காலத்தை நீட்டித்து, 03.08.2026 அன்று கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. BSNLEU சங்கத்திற்கு முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கம், NFTE சங்கத்திற்கு இரண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்ற அடிப்படையில் அங்கீகாரம் மற்றும் வசதிகள் மற்றும் BTEU சங்கத்திற்கு வரையறுக்கப்பட்ட வசதிகள் ஆகியவற்றை நீட்டித்து, 03.08.2026 அன்று கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. 

10ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடத்துவது தொடர்பாக, DIRECTOR (HR) உடன் கூட்டம் நடைபெற்ற பின்னரும், அது இறுதி செய்யப்படவில்லை. எனவே, 16.01.2027 அல்லது 10ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடும் வரை, அங்கீகார காலத்தை நீட்டித்து, BSNL நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது உள்ளது.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்