அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக, அந்த மாநிலம் முழுவதும், 2 லட்சத்திற்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு அஸ்ஸாமில் உள்ள சிவசாகர் BA மற்றும் ஜோர்ஹட், சராய்தியோ, கோலோகட் மாவட்டங்களின் பல பகுதிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் BSNL சேவைகளையும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும், இந்த பெருவெள்ளம், கடுமையான சேதத்தை விளைவித்துள்ளது. முன்னபோதும் சந்தித்திராத சவால்களை சந்தித்தபோதும், கடினமான நிலைமைகளிலும், BSNL சேவைகளை மறுசீரமைத்து, பராமரிக்கும் பணிகளை, ஊழியர்கள், ஓய்வு ஒழிச்சல் இன்றி செய்து வருகின்றனர்.
நிலைமைகளின் கடுமையை உணர்ந்த, BSNL ஊழியர் சங்கம், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், நிர்வாகம் பொருளாதார உதவிகளை செய்ய வேண்டும் என, CMD BSNLக்கு, கோரிக்கை விடுத்துள்ளது. இந்த இயற்கை பேரழிவின்போது, அர்ப்பணிப்புடன் செயல்படும் ஊழியர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில், உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
