அங்கீகார காலத்தை நீட்டிக்க வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம், கார்ப்பரேட் அலுவலகத்தில் முறையீடு. அனைத்து பதிவு செய்யப்பட்ட சங்கங்களிடம், 24.07.2026 அன்று விவாதம் நடத்திய பின்பும், பத்தாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை நடத்துவது தொடர்பான எந்த ஒரு முடிவையும், BSNL நிர்வாகம், இதுவரை எடுக்கவில்லை. இதற்கிடையில், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின், அங்கீகார நீட்டிப்பு காலம், 16.07.2026 உடன் முடிவடைந்துள்ளது. பத்தாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என, BSNL நிர்வாகத்தை வலியுறுத்தி, BSNLEU மற்றும் NFTE சங்கங்கள் ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளன. சரி பார்ப்பு நடந்து முடியும் வரை, தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் அங்கீகார காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றும், கேட்டுக் கொண்டுள்ளன.
30.07.2026 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா, PGM (SR) அவர்களை சந்தித்து, பத்தாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான அறிவிப்பை, உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடந்து முடியும் வரை, தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் அங்கீகார காலத்தை, நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU
