Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, August 1, 2026

எழுச்சியுடன் நடைபெற்ற மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்!


உத்தரகாண்ட் முன்னோடி திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மத்திய, மாநில, AUAB அறைகூவல் அடிப்படையில், 31.07.2026 ன்று, சேலம் மாவட்ட AUAB சார்பாக, சேலம் GM அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளை கண்டன ஆர்ப்பாட்டம், எழுச்சியுடன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தோழர்கள் R. ஸ்ரீனிவாசன் (BSNLEU), C. செந்தில்குமார் (SNEA), R. தணிகாசலம் (AIBSNLEA) கூட்டு தலைமை பொறுப்பேற்றனர். 

போராட்டத்தை, தோழர் K. ஸ்ரீனிவாசன், மாவட்ட செயலர், SNEA  முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். தோழர் S. தமிழ்மணி, AIBDPA சேலம் மாவட்ட செயலர் வாழ்த்துரை வழங்கினார். அவரை தொடர்ந்து, தோழியர் S. நித்யா, மாவட்ட உதவி செயலர், SNEA, தோழர் M. சண்முகம், மாநில அமைப்பு செயலர், BSNLEU, தோழர் N. சரவணன், மாநில சங்க நிர்வாகி, SNEA ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர், நிறைவுரை வழங்கினார். TNTCWU சேலம் மாவட்ட உதவி செயலர் தோழர் "கோச" செல்வம், விண்ணதிரும் கோஷங்களை எழுப்பியவுடன், தோழியர் C. லாவண்யா, மாவட்ட உதவி செயலர், BSNLEU நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். 

ஆர்ப்பாட்டத்தில், 80க்கும் மேற்பட்ட, தோழர், தோழியர்கள் கலந்து கொண்டனர். சுமார் 20க்கும் மேற்பட்ட பெண் தோழர்கள் கலந்து கொண்டது சிறப்பம்சம். அதே போல், AIBDPA - TNTCWU சங்க தோழர்களும், தலைவர்களும் திரளாக கலந்து கொண்டு இயக்கத்தை வெற்றி பெற செய்தனர். இயக்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், சேலம் மாவட்ட AUAB சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். 

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்