Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, July 11, 2026

உத்தரகாண்ட் மறுசீரமைப்பு! BSNLEU எதிர்ப்பு!!


அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களோடு எந்தவிதமான விவாதமும் இல்லாமல், "உத்தர்காண்ட் முன்னோடி திட்டம்" என்ற பெயரில், தன்னிச்சையாக உத்தரகாண்ட் மாநிலத்தை மறுசீரமைப்பு செய்ததற்கு, BSNL ஊழியர் சங்கம், தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.  இந்த பிரச்சனையின் மீது தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததோடு, ஏற்கனவே போராட்ட இயக்கங்களை துவக்கி உள்ள, உத்தரகாண்ட் மாநில ஊழியர்களின் வளர்ந்து வரும் எதிர்ப்பை எடுத்துரைத்து, நிர்வாகத்தை எச்சரித்து, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும், தங்களுடைய கடுமையான எதிர்ப்பை தலைமை பொது மேலாளர் இடம் தெரிவித்துள்ளனர்.  இந்தச் சூழ்நிலையில், இந்த சீரமைப்பை திரும்ப பெற்று, எந்த ஒரு அமைப்பு நிலை மாற்றத்தை அமலாக்கும் முன்பு, அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களோடு கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரி உள்ளது.

தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU