BSNLEU சேலம் மாவட்ட சங்க அலுவலகத்தில், BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, CoC., கூட்டம் நேற்று (10.07.2026) நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் S. தமிழ்மணி, தலைவர், CoC., தலைமை தாங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் S. ஹரிஹரன், கன்வீனர், அறிமுகவுரை வழங்கினார். கூட்டத்தில் BSNLEU சார்பாக, தோழர்கள் R. ஸ்ரீனிவாசன், S. ஹரிஹரன், K. சின்னசாமி, AIBDPA சார்பாக, தோழர்கள் S. தமிழ்மணி, E. கோபால், S. அழகிரிசாமி, TNTCWU சார்பாக, தோழர்கள் M. செல்வம், P. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களின் விவாதத்திற்கு பின், கீழ்க்கண்ட முடிவுகள், ஏக மனதாக எடுக்கப்பட்டது.
1. 16.07.2026 அன்று சேலம் GM அலுவலகத்தில், கோரிக்கை தின ஆர்ப்பாட்டம், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டமாக, நடத்துவது.
2. 2026 ஜூலை 22 முதல் 24 வரையிலான, மூன்று நாள் தர்ணா போராட்டத்தை, நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது.
3. 22.07.2026 அன்று, சேலம் GM அலுவலகத்தில், காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை தர்ணா போராட்டம் நடத்துவது.
4. 23.07.2026 அன்று, நாமக்கல், திருச்செங்கோடு, ஆத்தூர் ஆகிய மூன்று மையங்களில், தர்ணா போராட்டம் நடத்துவது.
5. 24.07.2026 அன்று சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், மாலை நேர தர்ணா போராட்டம் நடத்துவது.
6. மூன்று நாள் நடைபெறும் இயக்கங்களில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு, ட்விட்டர் கணக்கு பதிவு செய்ய, இயக்க, பயிற்சி கொடுத்து, 27.07.2026 அன்று சக்தி மிக்க டிவிட்டர் (X) பிரசார இயக்கம் நடத்துவது.
7. 07.08.2026 அன்று நடைபெறும் பாராளுமன்றம் நோக்கிய பேரணியில், கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் தோழர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்வது.
8. இயக்கங்கள் நடத்துவதற்கான செலவுகளை, BSNLEU - AIBDPA சங்கங்கள் சரி சமமாக பகிர்ந்து கொள்வது. தங்கள் சக்திக்கேற்ப, TNTCWU சங்கம் வழங்கும் உதவியையும் பெற்றுக் கொள்வது.
இறுதியாக, தோழர் M. செல்வம், இணை கண்வீனர் நன்றி கூற, கூட்டம் நிறைவு பெற்றது. சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட முடிவுகளை, செழுமையாக நிறைவேற்ற, கிளை சங்கங்களும், தோழர்களும், உதவ வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.





