2026, ஜூலை 29 ஆம் தேதி, புது டெல்லியில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தேசிய கருத்தரங்கத்திற்கான அறைகூவலை, மத்திய தொழிற்சங்கங்களும், சம்யுகத கிசான் மோர்ச்சாவும் இணைந்து வழங்கி உள்ளன. அதிகரித்து வரும் சுரண்டல்கள், தனியார் மயம், தொழிலாளர் விரோத கொள்கைகள் மற்றும் விவசாய துயரங்களை, தொழிலாளர்களும், விவசாயிகளும், சந்தித்து வரக்கூடிய இந்த சூழ்நிலையில், தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களை பலப்படுத்துவதில், இந்த கருத்தரங்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
விஜயவாடாவில் நடைபெற்ற, BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழுவிலும், இந்த பிரச்சனை விரிவாக விவாதிக்கப்பட்டது. மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுகத கிசான் மோர்ச்சாவின், வரலாற்று சிறப்புமிக்க இணைந்த இயக்கங்களுக்கு, முழு ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டும் என மத்திய செயற் குழு ஏக மனதாக முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து, அதிகப்படியான ஊழியர்களை திரட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி தல்கோத்ரா அரங்கில் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கம், காலை 10 மணிக்கு துவங்கும்.
நம் நாட்டில் உள்ள உழைக்கும் வர்க்கத்தின் அனைத்து போராட்டங்களிலும், BSNL ஊழியர் சங்கம், தோளோடு தோள் நின்று போராடி வருகிறது. இந்த முக்கியமான கருத்தரங்கத்தில், உற்சாகத்துடன் பெருந்திரளாக பங்கேற்பதை உறுதி செய்வதன் மூலம், நாம் இந்த மகத்தான பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்போம்.
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU
