சர்வதேச உழைக்கும் வர்க்க ஒற்றுமையில், சலனமற்ற தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்யும் வகையில், விஜயவாடாவில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தின் இரண்டாவது நாள், கியூபா உடனான ஒருமைப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. துவக்கத்தில், கியூப உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக, WFTU மற்றும் TUI விடுத்துள்ள அறைகூவலின் பின்னணியை, பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா விளக்கி பேசினார். அமெரிக்க ஏகாதிபத்தியம், கியூபாவின் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதிப்பது தொடர்பாக, அகில இந்திய துணைத் தலைவர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்புச் செயலாளர் தோழர் மனோஜ் சர்மா ஆகியோரும் விளக்கி பேசினர்.
பின்னர் மத்திய செயற்குழு உறுப்பினர்களும், சார்பாளர்களும், மின்னணு கையெழுத்து இயக்கத்தில் உற்சாகமாக பங்கேற்று, தொடர்ச்சியான தடைகளின் காரணமாக, கடுமையான சிரமங்களை சந்தித்து வரும் கியூப மக்கள் உடனான, தங்களின் ஒருமைப்பாட்டை தெரிவித்தனர்.
சர்வதேசியம், அமைதி, சமூக நீதி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றில், தனது உறுதிப்பாட்டை, BSNL ஊழியர் சங்கம் நிலை நிறுத்தும் வண்ணம், இந்த இயக்கம் நடைபெற்றது. நீதி இறையாண்மை மற்றும் கண்ணியத்திற்காக, உலகம் முழுவதும் போராடிவரும் உழைப்பாளி மக்களுக்கும், கொடுக்கப்பட்ட மக்களுக்கு, முழுமையான ஆதரவை வழங்கும் தனது செயல்பாட்டை, BSNL ஊழியர் சங்கத்தின் விஜயவாடா மத்திய செயற்குழு மீண்டும் எடுத்துக் காட்டியது.
சர்வதேச தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்!
கியூபா தனிமையில் அல்ல - கியூபாவுடன், BSNL ஊழியர் சங்கம் உடன் நிற்கும்!!
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU
