Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, July 11, 2026

விஜயவாடா மத்திய செயற்குழு தீர்மானங்கள்.


2026, ஜூலை 5 மற்றும் 6ஆம் தேதிகளில், BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம், விஜயவாடாவில் வெற்றிகரமாக நடைபெற்றது.  அகில இந்திய சங்க நிர்வாகிகளும், மாநிலச் செயலாளர்களும் உற்சாகத்துடன் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.  இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில், 47 மத்திய செயற்குழு உறுப்பினர்கள், முக்கியமான அமைப்பு ரீதியான மற்றும் கொள்கை பிரச்சனைகளை விவாதித்தனார். ஊதிய மாற்றம், BSNL சேவைகளின் முன்னேற்றம், ஊழியர்களின் புதிய பதவி உயர்வு கொள்கை, பத்தாவது உறுப்பினர் சரிபார்ப்பு, PERKS AND ALLOWANCES மாற்றம், 30% ஓய்வு கால பலன்கள், இலாகா தேர்வுகள், விதி 8 மற்றும் 9 இன் கீழ் மாற்றல்கள் மற்றும் BSNL ஊழியர்களை பாதிக்கும் பிரச்சினைகள், விவாதங்களில் முன்னுக்கு வந்தன.  விரிவான விவாதங்களின் அடிப்படையில், மத்திய செயற்குழுவின் இரண்டாம் நாளன்று கீழ்க்கண்ட தீர்மானங்கள், ஏகமனதாக நிறைவேற்றப் பட்டன:-

1) 2025, அக்டோபர் மாதத்தில் கையெழுத்திடப்பட்ட ஊதிய உடன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்குவதற்கு, DoT, அதிக காலதாமதம் செய்வதை, வன்மையாக கண்டித்த மத்திய செயற்குழு, ஒருங்கிணைப்பு குழு அறைகூவல் விடுத்துள்ள, 2026, ஆகஸ்ட் 7, பாராளுமன்ற நோக்கிய பேரணி க்கு, பெரிய அளவில் BSNL ஊழியர்களை அணிதிரட்ட முடிவு செய்தது.

2) BSNL சேவைகள் மோசம் அடைந்து வருவதன் மீது, கடுமையான வருத்தத்தை பதிவு செய்த மத்திய செயற்குழு, அதனை சீர்செய்ய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என BSNL நிர்வாகம், DoT மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறது. 

3) உத்தரகாண்ட் முன்னோடி திட்டம் என்ற பெயரில், BSNL ஊழியர்கள் மீது, நிர்வாகத்தின் தாக்குதலை வன்மையாக கண்டித்த மத்திய செயற்குழு கூட்டம், உத்தரகாண்ட் மாநில சீரமைப்பு திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.

4) BSNL ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் DoTயின் முயற்சியை வன்மையாக கண்டித்த மத்திய செயற்குழு,  ஊழியர் எண்ணிக்கை குறைப்பதன் மூலம் சேவையின் தரம், மிகக் கடுமையாக பாதிக்கும் என்பதால், இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டத்திற்கான எந்த ஒரு முன்மொழிவையும், கடுமையாக எதிர்ப்பது என்று முடிவு செய்துள்ளது.

5) உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலமாக நடைபெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ள மத்திய செயற்குழு கூட்டம், CHECK OFF முறை அல்லது எந்த ஒரு மின்னணு முறையிலாவது நடத்தலாம் என்கின்ற, BSNL நிர்வாகத்தின் முயற்சியை கடுமையாக கண்டித்து உள்ளது.

6) ஊழியர்களுக்கான புதிய பதவி உயர்வு கொள்கை மற்றும் PERKS AND ALLOWANCES மாற்றம் ஆகியவற்றை அமல்படுத்த, தீவிரமான போராட்டங்களை நடத்த மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.  இதற்காக அமைக்கப்பட்ட குழுக்களின் செயல்பாடின்மைக்கு, BSNL நிர்வாகத்திற்கு, இந்த கூட்டம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்தது.

7) CMD BSNLஐ வெளி சந்தையில் இருந்தோ, கார்ப்பரேட் மட்டங்களில் இருந்தோ, தேர்வு செய்ய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்த மத்திய செயற்குழு, இந்த நிறுவனத்தை பலப்படுத்த உறுதியுடன் இருப்பவரை, நிரந்தர CMD ஆக நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.

தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU