ஜூலை, 2026 முதல் உயரும் என எதிர்பார்க்கப்படும் IDA மீதான தகவல் மற்றும் 2025-26 நிதியாண்டிற்கான EPF வட்டி விகிதம்.
01.07.2026 முதல் IDA, 3.5% உயரும் என நமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கான இலாகா (DPE) மூலம், அரசாங்கம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் கூட, தொழிலாளர் ஆணையம் வெளியிட்டுள்ள நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையிலான கணக்கீட்டின்படி, 2007 ஊதிய விகிதங்களின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் 01.07.2026 முதல், 3.5% IDA உயரும் என தெரிகிறது. DPEயின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் முறையான அறிவிப்பு வெளியிட்ட பின்னர்தான் உண்மையான விகிதம் என்பது உறுதி செய்யப்படும்.
இதற்கு இடையில், 2025- 26 நிதியாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) சேர்ந்துள்ள தொகைக்கான வட்டி விகிதத்திற்கான உத்தரவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) வெளியிட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில், EPF கணக்கில் சேர்ந்துள்ள தொகைக்கு 8.25% வட்டியை, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அங்கீகரித்துள்ளதாக, EPFO, 01.07.2026 அன்று வெளியிட்டுள்ள கடித எண் INV - 11/2021/INV/E-41960/2519 தெரிவிக்கிறது. அந்தத் தொகை EMPLOYEES PROVIDENT FUND SCHEME-1952 பாரா 60ல் உள்ள விதிகளின்படி, தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
IDA உயரும் என்ற செய்தியும், EPF வட்டி விகிதங்கள் அறிவிக்கப் பட்டுள்ளதும், BSNL ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. IDA மாற்றம் தொடர்பான உத்தரவை, DPE வெளியிட்டவுடன் அந்த செய்தியை BSNL ஊழியர் சங்கம், தனது உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும்.
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU
