Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, June 7, 2026

ஓய்வு கால பலன்கள் (SAB) - BSNLEU கடிதம்


BSNLலில், வேலைக்கு  தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, ஓய்வு கால பலன்கள் (SAB), அடிப்படை ஊதியம் மற்றும் பஞ்சபடியில், 30  சதவிகிதம் இருக்க வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு, 01.06.2026 அன்று கடிதம் எழுதி உள்ளது. BSNLலில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின், ஓய்வு கால பலன்கள் பிரச்சனையை, BSNL ஊழியர் சங்கம், மீண்டும் CMD BSNL உடன் எடுத்துள்ளது.  

BSNLலில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு, ஓய்வு கால பலன்கள், அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில், 30 சதவிகிதம் இருக்க வேண்டும் என இரண்டாவது ஊதிய மாற்ற குழு (2nd PRC) பரிந்துரைத்துள்ளது.  ஆனால், BSNL நிர்வாகம், தற்போது 25.1% மட்டுமே வழங்குகின்றது.  இது 4.9% குறைவாகும். BSNL ஊழியர் சங்கம், இந்த பிரச்சனையை, தேசிய கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் முறையிட்டுள்ளது. இதனால் BSNLலில் பணியமற்றப்பட்ட ஊழியர்கள் உட்பட, அனைவரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.  

நீண்ட காலம் தேங்கியுள்ள இந்த நியாயமான கோரிக்கையை தீர்வு காணும் வகையில், இரண்டாவது ஊதிய மாற்ற குழுவின் பரிந்துரைகளை அமலாக்குவதற்கு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLஐ வலியுறுத்தி உள்ளது.

தோழர்  அனிமேஷ் மித்ரா, பொதுச் செயலாளர், BSNLEU