BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின், "முப்பெரும் விழா", 02.06.2026 அன்று, சேலம் செவ்வை தொலைபேசி நிலைய கூட்ட அரங்கில், பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவிற்கு, BSNLEU சேலம் மாவட்ட தலைவர் தோழர் R. ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, சங்க கொடியை, தோழர் M. சண்முகம், மாநில அமைப்பு செயலர், ஏற்றி வைத்தார். பின்னர் விழா அரங்கில், தோழியர் C. லாவண்யா, ADS அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் D. பிரசாத், DOS அனைவரையும் வரவேற்றார்.
தோழர் S. ஹரிஹரன் மாவட்ட செயலர், கூட்டத்தின் நோக்கங்களையும், சேவை மேம்பாடு சம்மந்தமாகவும், அறிமுகவுரை வழங்கினார். BSNLEU தமிழ் மாநில தலைவர் தோழர் S. மகேஸ்வரன், விழாவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். அவர் தம் உரையில், மூன்றாவது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், VRSல் சென்றவர்களுக்கும், செல்லாதவர்களுக்கும் உள்ள ஓய்வூதிய வேறுபாடு, முழுமையான சேவைக்கு கிடைக்கும் பலன்கள் என பல விஷயங்களை விளக்கி பேசினார்.
தோழமை சங்கங்கள் சார்பாக, தோழர்கள் S. தமிழ்மணி, மாவட்ட செயலர், AIBDPA, தோழர் S. அழகிரிசாமி, மாநில அமைப்பு செயலர், AIBDPA, தோழர் M. செல்வம், மாவட்ட செயலர், TNTCWU, தோழர் C. பாஸ்கர், மாநில பொருளர், TNTCWU ஆகியோர் வாழ்த்துரை மற்றும் கருத்துரை வழங்கினார்கள். அதன் பிறகு BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் A. பாபு ராதா கிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில், BSNL நிறுவனத்தின் தற்போதைய நிலை, BSNLEU வெள்ளி விழா கொண்டாட்டங்கள், 10வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் என பல விஷயங்களை விளக்கி பேசினார். அவரை தொடர்ந்து, தோழர் E. கோபால், மாநில உதவி செயலர், AIBDPA வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக, தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கியபின், பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
31.01.2026 முதல் 31.05.2026 வரை பணி நிறைவு பெற்று, விழாவில் கலந்து கொண்ட தோழர்கள், கௌரவிக்கப்பட்டனர். பின்னர் தோழர் M. சண்முகம், COS., கௌரவிக்கப்பட்டார். விழாவிற்கு வந்த பல தோழர்கள், தோழர் M. சண்முகம், COS அவர்களுக்கு சால்வை அணிவித்து, கௌரவப்படுத்தினார்கள். AIBDPA மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு வாழ்த்துரை வழங்கியபின், தோழர் M. சண்முகம் ஏற்புரை வழங்கினார். அவர் தம் குடும்பத்தினரும். நன்றி தெரிவித்து, வாழ்த்தினார்கள். தோழர் R. ரமேஷ், மாவட்ட பொருளர், நன்றியுரை வழங்கியபின், உணவு இடைவேளைக்காக விழா ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மதியம், அதே இடத்தில், BSNLEU சேலம் மாவட்ட செயற்குழு சிறப்பாக நடைபெற்றது.
கொடிகள், தோரணங்கள் என சிறப்பான அலங்காரங்கள், அன்பான உபசரிப்பு, அறுசுவை உணவு பரிமாறியது, இருக்கைக்கே தேநீர் பலகார பட்டுவாடா, தலைவர்கள் வருகை, வழி அனுப்புதல் என சிறப்பான பணிகள் செய்த BSNLEU செவ்வை கிளை தோழர்களையும், TNTCWU தோழர்களையும், மனதார பாராட்டுகிறோம்.
பரவலாக மாவட்டம் முழுவதிலுமிருந்து, விழாவில் கலந்து கொண்ட BSNLEU - AIBDPA - TNTCWU சங்க தோழர்கள், மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் என விழாவில் திரளாக கலந்து கொண்ட நமது தோழர்களுக்கும், தோழர் M. சண்முகம், COS குடும்பத்தார், நண்பர்களுக்கும், நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். நம் அழைப்பை ஏற்று, விழாவில் கலந்து கொண்டு, நல்ல உரை வழங்கிய, BSNLEU மாநில தலைவர் மற்றும் மாநில உதவி தலைவருக்கும் நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மொத்தத்தில், சேலம் மாவட்டத்தில், CoC சார்பாக நடைபெறும் விழா என்றாலே, அது வெற்றி விழா தான், என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
















































