01.06.2026 அன்று, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் துணைத் தலைவர், தோழர் P.அபிமன்யு ஆகியோர், DIRECTOR (HR) மரு.கல்யாண் சாகர் நிப்பானி அவர்களை சந்தித்து, கீழ்கண்ட முக்கியமான பிரச்சனைகளை விவாதித்தனர்.
1) மனித வள பிரச்சனைகளை தீர்வு காண்பதில் அதீத கால தாமதம்:-
ஊழியர்களின் மனித வள பிரச்சனைகளை தீர்வு காண்பதில் ஏற்பட்டு வரும் அதீத கால தாமதத்தின் மீது, தங்களது கடுமையான கோபத்தை தலைவர்கள் தெரிவித்தனர். DIRECTOR (HR) உடன் விவாதித்த பல பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய தலைவர்கள், அவை எதுவும் தீர்வு காணப்படவில்லை என்பதை தெரிவித்தனர். BSNL ஊழியர் சங்கம் முன்வைத்த மனிதவள பிரச்சனைகளில் தீர்வு தொடர்பான ஒரு பரிசீலனை கூட்டத்தை, விரைவில் கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளை வைத்து நடத்துவதாக, DIRECTOR (HR) உறுதியளித்தார்.
2) அலவன்ஸ்கள் மாற்றம்:-
ஊழியர்களுக்கான அலவன்ஸ்கள் மாற்றத்திற்காக, நிர்வாகம் ஏற்கனவே ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு உருவாக்கப்பட்டு ஒரு வருட காலம் ஆகிறது. ஆனால், அந்தக் குழுவின் முன் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கான வாய்ப்பை, இதுவரை அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தக் குழுவின் முன், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், தங்களது கருத்துக்களை தெரிவிக்க, உடனடியாக வாய்ப்பு வழங்க வேண்டும் என தலைவர்கள் கோரினர். இதற்கு தேவையானவற்றை செய்வதாக DIRECTOR (HR) உறுதி அளித்துள்ளார்.
3) ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பதவி உயர்வு கொள்கையில் உள்ள பாரபட்சம் நீக்கப்படுவது:-
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பதவி உயர்வு கொள்கைகளில் உள்ள பாரபட்சங்களை நீக்குவது என்கின்ற கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதற்காக, தேசிய கவுன்சில் முடிவின் அடிப்படையில், நிர்வாகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு உருவாக்கப்பட்டு, ஏற்கனவே ஒரு வருட காலம் முடிந்து விட்டது. அந்த குழுவின் முன், தங்களது கருத்துக்களை முன்வைக்க, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு, ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இதில் தேவையானவற்றை செய்வதாக DIRECTOR (HR), உறுதி அளித்துள்ளார்.
4) கேஷுவல் ஊழியர்கள் மற்றும் TSM களுக்கு, மூன்று தவணை பஞ்சப்படி வழங்காமல் உள்ளது:-
கேஷுவல் ஊழியர்கள் மற்றும் TSM களுக்கு, 01.01.2025, 01.07.2025 மற்றும் 01.01.2026 முதல் தரப்பட வேண்டிய மூன்று தவணை DAக்கள் வழங்கப்படாமல் உள்ளது என்று, தலைவர்கள் சுட்டிக் காட்டினார்கள். இந்த 3 தவணை DAக்கள், உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்தப் பிரச்சனையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, DIRECTOR (HR) கூறியுள்ளார்.
5) விதி 9ன் கீழ் JEக்களின் மாற்றல்கள்:-
பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேஷ், ஹரியானா மற்றும் வடகிழக்கு 1 ஆகிய மாநிலங்களில் இருந்து, 7 JEக்கள், U.P. கிழக்கு மாநிலத்திற்கு, தற்காலிக மாற்றலில் அனுப்பப் பட்டுள்ளனர். இப்போது இவர்கள், தங்களது சொந்த மாநிலங்களுக்கு, செல்ல வேண்டும் என நிர்பந்தப் படுத்தப் படுகின்றனர். இந்த பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேஷ், ஹரியானா மற்றும் வடகிழக்கு 1 ஆகிய 4 மாநிலங்களும் உபரி மாநிலங்கள். அதே போல, U.P. கிழக்கு மாநிலமும் உபரி மாநிலம் தான். எனவே, U.P. கிழக்கு மாநிலத்தில் உள்ள இந்த 7 JEக்களும், அங்கிருந்து விடுவிக்கப் படக் கூடாது என தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்சனையை கவனிப்பதாக DIRECTOR (HR) உறுதி அளித்துள்ளார்.
6) இலக்கா தேர்வுகளை நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள்:-
போதுமான காலி பணியிடங்கள் இல்லாத மாநிலங்களில், இலாகா தேர்வுகள் நடத்துவது என்கின்ற பிரச்சனையை முன்னிலைப் படுத்திய தலைவர்கள், அது ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை, மோசமாக பாதிக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார்கள். கடந்த அதிகாரபூர்வ சந்திப்பின்போது உறுதி அளிக்கப்பட்டது போல, பஞ்சாப் மாநில பிரச்சனையில், DIRECTOR (HR)ன் கூடுதல் கவனம் தேவை என, தலைவர்கள் தெரிவித்தனர். இந்தப் பிரச்சனையை ஆராய்ந்து, பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, DIRECTOR (HR) உறுதி அளித்தார்.
தோழர் அனிமேஷ் மித்ரா, பொதுச் செயலாளர், BSNLEU
