பல்வேறு PERKS AND ALLOWANCES மாற்றங்களை பரிசீலிப்பதற்காக, ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுக்களை, கார்ப்பரேட் அலுவலகம் கலைத்து விட்டு, அதனை விரைவு படுத்த, ஒரு புதிய குழுவை உருவாக்கி உள்ளது. PERKS AND ALLOWANCES மாற்றம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, BSNL ஊழியர் சங்க தலைவர்கள், 21.05.2026 அன்று CMD BSNLஐயும், 01.06.2026 அன்று, DIRECTOR (HR) அவர்களையும் சந்தித்து வலியுறுத்தினர். உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தி கடிதங்களும் எழுதப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகளுக்கு விரைவில் தனது பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தலோடு புதிய குழுவை உருவாக்கி, கார்ப்பரேட் அலுவலகம் 02.06.2026 தேதியிட்ட BSNLCO-A/11(11)/4/2025-ESTAB என்று கடிதத்தை வெளியிட்டுள்ளது. மருத்துவ வசதிகள், TA/DA மாற்றம், ஓய்வு கால பலன்கள் மற்றும் IDA தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட முக்கியமான தேங்கியுள்ள பிரச்சனைகளை பரிசீலிக்க வேண்டும் என, குறிப்பான பணிகள், அந்த குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக தேங்கியுள்ள PERKS AND ALLOWANCES மாற்றத்தை, நிர்வாகம் விரைவில் அமலாக்க உதவும் வகையில், தனது பரிந்துரைகளை புதிதாக அமைக்கப்பட்ட இந்த குழு, விரைவில் வழங்கும் என BSNLEU கருதுகிறது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
