Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, June 12, 2026

DoTயின் இணை செயலாளர் (நிர்வாகம்) அவர்களுடன், AUAB தலைவர்களின் முக்கியமான சந்திப்பு.



09.06.2026 அன்று AUAB தலைவர்கள் மற்றும் திரு ராய்தி மாதவ ராவ், DIRECTOR PSU, DoT முன்னிலையில், திரு K.பாலாஜி, DoTயின் இணை செயலாளர் (நிர்வாகம்) ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நடைபெற்றது. AUAB சார்பாக, தோழர் சந்தேஷ்வர் சிங், தலைவர் AUAB & GS NFTE, தோழர் அனிமேஷ் மித்ரா, அமைப்பாளர் AUAB & GS BSNLEU, திரு M.S.அடசுல் GS SNEA மற்றும் SEWA BSNLன் முதன்மை புரவலர் தோழர் திரு N.D. ராம் ஆகியோர் பங்கேற்றனர்.  

துவக்கத்தில் தலைவர்கள் அனைவரும், 3RD PRC/ BSNL ஊழியர்களுக்கான ஊதிய உடன்பாடு ஆகியவற்றிற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கூட்டான மனு  ஒன்றை வழங்கினார்கள். விவாதத்தின் போது,  அரசாங்கத்தின் திட்டங்களுக்காக,  லாப நஷ்டங்களை  கணக்கிடாமல் பணியாற்றும், இந்திய அரசாங்கத்தின், கேந்திரமான பொதுத்துறை நிறுவனமாக BSNL இருப்பதால், AFFORDABILITY பிரிவை பயன்படுத்தாமல்,  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான, ஊதிய மாற்றங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்கின்ற நமது  கோரிக்கைகளுக்கு வலுவூட்டக்கூடிய, அனைத்து DOCUMENTகளையும், தலைவர்கள் வழங்கினார்கள்.  

கீழ்க்கண்டவற்றின் மீது பலன் அளிக்கும் விவாதங்கள் நடைபெற்றன:-

1) ஊழியர்களுக்கான ஊதிய  பேச்சு வார்த்தையில் சங்கங்களின் நிலைபாடும், அனுமதியும்.

2) 3RD PRCக்கு ஒப்புதல் வேண்டி விண்ணப்பம். 

3) ஓய்வூதிய மாற்றம் தொடர்பான பிரச்சனைகள். 

4) SET தேர்வு, மற்றும் நிதி பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பொது மேலாளர்கள் எடுப்பதை நிறுத்தி, BSNLன் எதார்த்தமான தேவைகளுக்காக, வெளியில் இருந்து ஆட்களை  எடுப்பது பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியம்.

5) BSNLலின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான விஷயங்கள் மற்றும் BSNLலின் மனிதவள பிரச்சனைகள். 

மாலை 4.15க்கு துவங்கிய இந்த கூட்டம், பலனுள்ள விவாதங்களுக்கு பின், 5.20க்கு நிறைவு பெற்றது.  இந்த பிரச்சனைகளில் சாதகமான முன்னேற்றங்கள் இருக்கும் என்று தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

AUAB தலைமையகம்