PERKS AND ALLOWANCES மாற்றம் - தற்போதுள்ள குழுவை கலைத்துவிட்டு, பல்வேறு ALLOWANCEகளை தவிர்த்து, ஒரு புதிய குழுவை கார்ப்பரேட் அலுவலகம் அமைத்ததற்கு, மத்திய சங்கம், தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
18.06.2026 அன்று, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் தலைவர் தோழர் M.விஜயகுமார் ஆகியோர், கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள திரு ராஜீவ் கவுசிக் PGM(SR) மற்றும் S.P.சிங் PGM(ESTT) ஆகியோரை சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, தற்போதுள்ள குழுவை கலைத்துவிட்டு, அதன் வரம்புக்குள் இருந்த, பல்வேறு ALLOWANCEகளை தவிர்த்து, ஒரு புதிய குழுவை கார்ப்பரேட் அலுவலகம் அமைத்ததற்கு, தங்களின் கடுமையான அதிருப்தியை தெரிவித்தனர். தேசிய கவுன்சில் முடிவின் அடிப்படையில், அந்த குழு அமைக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய தலைவர்கள், அது ஒரு வருட காலமாக செயல்பட்டு வந்ததையும் எடுத்து கூறினர். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களோடு எந்த ஒரு விவாதமும் இல்லாமல், தன்னிச்சையாக அந்தக் குழுவை கலைத்துவிட்டு, ஒரு புதிய குழுவை உருவாக்கியதற்கு, தங்களின் கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.
நிர்வாகத்தின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு, BSNL ஊழியர் சங்கத்தின் எதிர்ப்பை பதிவு செய்த தலைவர்கள், இந்தக் குழுவின் வரம்பிற்குள், அனைத்து ALLOWANCEகளையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் ஊழியர் தரப்பு பிரதிநிதிகளையும் அந்த குழுவில் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் இந்த பிரச்சனை தொடர்பாக ஒரு எதிர்ப்பு கடிதத்தையும், நமது தலைவர்கள் DIRECTOR (HR) இடம் வழங்கி வந்தனர்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய / மாநில சங்கங்கள்
மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும்
