கியூபாவிற்கு ஆதரவாக, சர்வதேச டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்திற்கு, WFTU அறைகூவல் - இந்த இயக்கத்தில், BSNLEU பங்கேற்பு.
அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்துள்ள கொடூரமான பொருளாதார தடைகள் காரணமாக, தொடர்ந்து துயருற்று வரும் கியூபாவிற்கு ஆதரவாக, ஒரு வார கால, டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது என, BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலக கூட்டமும், அகில இந்திய மையக் கூட்டமும் முடிவு செய்துள்ளது. இந்தப் பிரச்சாரத்தில், ஊழியர்கள் திரளாக பங்கேற்பதை உறுதி செய்ய, மத்திய சங்க நிர்வாகிகளும், மாநில மற்றும் மாவட்ட சங்கங்களும், பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது. டிஜிட்டல் கையெழுத்தை பதிவு செய்யவும், கியூபா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுதியான செய்தியை அனுப்பவும், தேவையான ஒரு இணைப்பு, ஏற்கனவே சம்பந்தப்பட்ட தோழர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
"கியூபா தனிமையில் இல்லை - நாங்கள் கியூபா உடன் இருக்கிறோம்" என்ற முழக்கத்திற்கு ஆதரவாக, நாமும் நமது குரலை, எழுப்புவோம். 2026, ஜூன் 22 முதல், 29 வரை நடைபெற உள்ள இந்த இயக்கத்தை, மாபெரும் வெற்றி பெறச் செய்யும் வகையில், தோழர்கள் அனைவரும் முழு மனதுடன் பங்கேற்போம்.
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU
