IMA அரங்கம் , மதுரை. 24.06.2026 - காலை 10 மணி.
ஒப்பற்ற BSNL ஊழியர் சங்கம் உருவாகி, இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இக்காலத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மேன்மைக்கும், ஊழியர்களின் நலன் காக்கவும் பல ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தி வரலாறு படைத்துள்ளது, BSNL ஊழியர் சங்கம். இப்பேரியக்கத்தின் வெள்ளி விழாவை நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நமது சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் முடிவு செய்துள்ளது. இம்முடிவிற்கிணங்க, தமிழகத்தில் நமது சங்கத்தின் வெள்ளி விழாவை மதுரையில் எழுச்சியுடன் கொண்டாடுவது என முடிவு செய்துள்ளோம்.
இவ்விழா, 24.06.2026 அன்று காலை 10 மணி முதல், தமிழின் தொன்மையை பறைசாற்றி வரும் மதுரை மாநகரத்தில், மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள IMA ஹாலில், நடைபெற உள்ளது. இதில், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் துணைத் தலைவர் தோழர் P. அபிமன்யு ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த காலங்களில், BSNL ஊழியர் சங்கத்தின் மாநில சங்க நிர்வாகிகளாகவும், வழிகாட்டும் மூத்த தலைவர்களாகவும் செயல்பட்டு BSNL ஊழியர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய தோழர்களை கௌரவிக்கின்ற நிகழ்வும் நடைபெற உள்ளது.
BSNL ஊழியர் சங்கத்தின் இந்த வெள்ளி விழா நிகழ்ச்சியில், தாங்கள் அனைவரும், தவறாமல் பெருந்திரளாய் கலந்து கொள்ள வேண்டுமென தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தோழர் B. மாரிமுத்து, மாநில செயலாளர்
