Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, June 12, 2026

2026 நிதியாண்டின், நான்காவது காலாண்டில், BSNL லின் முடிவுகள்


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மீண்டு எழுதல் இன்னமும் நடைபெறவில்லை என்பதை முன்னிலைப்படுத்தி,  BSNLலின் 4ஆவது காலாண்டில், 1,269 கோடி ரூபாய்கள் நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வருகின்றன.  கணிசமான அரசின் ஆதரவு, 4G துவக்கத்திற்கான முதலீடு மற்றும் புத்தாக்கத்திற்கான உறுதிமொழிகள் ஆகியவை இருந்த போதும், வருவாய் வளர்ச்சி போதுமானதாக இல்லை என்பதால், பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. வலுவான கொள்கை ஆதரவு, விரைவான வலைத்தள விரிவாக்கம், மேம்படுத்தப்பட்ட சேவையின் தரம் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் நியாயமான சமதள போட்டி ஆகியவையின் அவசர தேவையை, இது எடுத்துக் காட்டுகிறது.   

நிறுவனத்தை பலப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யவும், BSNL ஊழியர்கள் அயராத உழைப்பை செலுத்தி வரும்போது, சந்தை பங்கீட்டை அதிகரிக்கவும், வருமானத்தை உயர்த்தவும், நீண்ட கால பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யவும், ஒன்றிய அரசாங்கமும், BSNL நிர்வாகமும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வலிமையான BSNL, ஊழியர்களுக்கு மட்டுமே முக்கியம் என்பது அல்ல.  நாட்டிற்கு கட்டுப்படியான, நம்பகமான, கேந்திரமான தொலைத்தொடர்பு சேவைகளை பாதுகாக்கவும், அது மிக மிக அவசியம்.  

தோழர் அனிமேஷ் மித்ரா, பொதுச் செயலாளர் BSNLEU