02.06.2026 அன்று, முப்பெரும் விழா அரங்கிலேயே, உணவு இடைவேளைக்கு பின், BSNLEU சேலம் மாவட்ட செயற்குழு, உற்சாகமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர் அறிமுகவுரை வழங்கினார். BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் M. சண்முகம், செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற விவாதத்தில், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். செயற்குழு உறுப்பினர்களின் விவாதம், செழுமையாகவும், உற்சாகமாகவும் இருந்தது. இடையில், TNTCWU மாவட்ட செயலர் தோழர் M. செல்வம், மாவட்ட உதவி செயலர் தோழர் P. செல்வம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விவாதங்களுக்கு பதில் அளித்து, மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கியபின், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1. 12.02.2026 வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
2. 16.06.2026 முதல் 15.07.2026 வரை ,புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவது.
3. 24.06.2026 அன்று மதுரையில் நடைபெறும் BSNLEU வெள்ளி விழா கொண்டாட்டங்களில் நமது தோழர்கள் திரளாக பங்கேற்பதை உறுதி செய்வது.
4. BSNLEU வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நன்கொடையாக, அனைத்து உறுப்பினர்களிடமும், தலா ரூ250 வசூலித்து, உடனடியாக, மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைப்பது.
5. கிளைகள் இணைப்பு சம்மந்தமாக, அடுத்த செயற்குழுவில், இறுதி முடிவு எடுப்பது.
6. மாவட்டம் தழுவிய இயக்கங்களில், கட்டாயமாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வது
7. இனி நடைபெறும் வேலை நிறுத்தங்களில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கட்டாயமாக கலந்து கொள்வது.
8. ஒப்பந்த ஊழியர்களின் RLC வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்று, ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை பெற்று கொடுப்பது.
9. புதிய டெண்டரில், விடுபட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் பணி பெற்று கொடுப்பது, ஊதியத்தை உயர்த்தி பெற்று தருவது.
10. சேவை கருத்தரங்கில் சொல்லப்பட்ட சேவை மேம்பாடு சம்மந்தமான கருத்துக்களை தொகுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு வார காலத்திற்குள் கடிதம் கொடுப்பது.
11. பணி மாறுதல்கள், சேவை குறைபாடுகள், அலுவலக பராமரிப்பு, CSC ஊழியர் பற்றாக்குறை, கணினி குறைபாடு, மொபைல் சிக்னல் பிரச்சனை போன்ற விஷயங்களுக்காக, தொடர்ச்சியாக நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது.
மாலை 6 மணி அளவில், தோழர் B. வீரேஷ்குமார், கிளை தலைவர், செவ்வை கிளை, நன்றி கூற, கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.





















