நாள் : 01.07.2026, புதன் கிழமை
நேரம் : காலை 11 மணி அளவில்
இடம்: பொது மேலாளர் அலுவலகம், சேலம்.
நீண்ட காலமாக தேங்கியுள்ள ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்வு காண வலியுறுத்தி, தேசிய எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க வேண்டும் என BSNLEU சங்கத்தின் அகில இந்திய மைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், 01.07.2026 அன்று, மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தி, மாவட்ட, மாநில, அகில இந்திய அளவில் கோரிக்கை மகஜர் வழங்க வேண்டும் என்பது போராட்ட அறைகூவலாகும்.
நமது சேலம் மாவட்டத்தில், எந்த இயக்கமாக இருந்தாலும், அது CoC பதாகையின் கீழ் நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில், நமது மாவட்ட சூழலுக்கு ஏற்ப, 01.07.2026 அன்று காலை 11 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட இயக்கத்தை நடத்தி, மாவட்ட பொது மேலாளரை சந்தித்து, மகஜர் வழங்க உள்ளோம். மாவட்டம் முழுவதும் உள்ள BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், திரளாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
