01.01.2026 முதல் IDA வழங்குவதற்கான உத்தரவை, DoT இறுதியில் வெளியிட்டு விட்டது. 21.05.2026 அன்று காலை, பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் துணை தலைவர் தோழர் P.அபிமன்யு ஆகியோர், திரு S.P.சிங், PGM(Estt.) அவர்களை சந்தித்து, சில முக்கியமான விஷயங்களை விவாதித்தனர். விவாதித்தின் போது, IDAவிற்கான கோப்பினை DoT அனுமதித்து விட்டது என தெரிவித்த திரு S.P.சிங், இந்த மாத ஊதியத்துடன் IDA நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.
இது அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான, ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் ஒன்று பட்ட தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். BSNLலில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் தொடர்ச்சியான அழுத்தம் மற்றும் போராட்ட இயக்கங்கள் காரணமாக, பாரா 5ஐ நீக்கி விட்டு, 01.04.2026 முதல் IDA வழங்குவதற்கான உத்தரவை வெளியிட வேண்டிய கட்டாயம் DPEக்கு ஏற்பட்டது.
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU
