Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, May 22, 2026

AUAB தலைமை - CMD BSNL சந்திப்பு!


19.05.2026 மாலை, AUAB  தலைமை, திரு J. ராபர்ட் ரவி, CMD BSNLஐ சந்தித்து, BSNL  நிறுவனம் மற்றும் ஊழியர்களை பாதிக்கும் பல முக்கியமான பிரச்சனைகளை விவாதித்தனர்.  இந்த சந்திப்பின்போது, 01.01.2026 முதல் IDA நிலுவை வழங்க வேண்டும் என AUAB தலைவர்கள் வலிமையாக வாதாடினர். IDA நிலுவைத் தொகையை, இந்த மாத ஊதியத்துடன்  வழங்குவதை உறுதி செய்யக் கூடிய வகையில், இந்த பிரச்சனையை DoTயுடன், தொடர்ந்து விவாதித்து வருவதாக, CMD BSNL தெரிவித்தார். 

குஜராத் மாநில JTO தாக்கப்பட்ட பிரச்சனையில், அதில் ஈடுபட்ட TIPன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என AUAB தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு அலவன்ஸ், தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி பிரச்சினைகள் உள்ளிட்ட இதர முக்கியமான பிரச்சனைகளும் விவாதிக்கப் பட்டன. BSNLன்  வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான, நிர்வாகத்தின் செயல் திட்டங்களை தெரிவிப்பதற்காகவும் மனித வள  பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், CMD BSNL, ஊழியர் மற்றும் அதிகாரிகள்  சங்கங்களோடு ஒரு அதிகாரபூர்வ சந்திப்பு நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் எடுத்துக் கூறினர். 

தலைவர்கள் தெரிவித்த அனைத்து பிரச்சனைகளையும் கேட்டுக் கொண்ட CMD BSNL, விவாதிக்கப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்வு காண தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU