Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, May 22, 2026

மனித சங்கிலி போராட்டம்!

 


01.01.2026 முதல் நாம் பெற வேண்டிய, பஞ்சபடி உயர்வை, வழங்க மறுத்து, Affordability clause, "வழங்கும் சக்தி" என்கிற பிரிவை ஏற்படுத்திய ஒன்றிய அரசாங்கத்தையும், DoT நிர்வாகத்தையும் கண்டித்து, அந்த பிரிவை நீக்கி, மே மாத ஊதியத்தில் நிலுவை வழங்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட AUAB சார்பாக, மனித சங்கிலி போராட்டம், 20.05.2026 அன்று, சேலம் GM அலுவலக வாயிலில், சிறப்பாக நடைபெற்றது. சுமார் 300 தோழர்கள் இயக்கத்தில் கலந்து கொண்டார்கள். 

CBMPA பதாகையின் கீழ், அனைத்து ஓய்வூதியர் சங்கங்கள் நடத்திய தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள், AUAB தோழர்களோடு, கரம் கோர்த்து நின்றதால், போராட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

முன்னதாக, அனைத்து ஒய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு, CBMPA சார்பாக, சிறப்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக போராட்டத்தை வாழ்த்தினோம்.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்