Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, May 22, 2026

BSNLEU தலைவர்கள் - CMD BSNL அவர்களை சந்தித்தனர்!


21.05.2026 அன்று, BSNLன் CMD திரு. ஏ. ராபர்ட் ஜே. ரவி அவர்களைச் சந்தித்து, ஊழியர்களின் சில முக்கியப் பிரச்சினைகள் குறித்து BSNLEU தலைவர்கள் விவாதித்தனர். இக்கூட்டத்தில் BSNLEU பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் துணைத் தலைவர் தோழர் பி. அபிமன்யு ஆகியோர் கலந்துகொண்டு, விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர். 

3வது ஊதிய மாற்றம், 10வது உறுப்பினர் சரிபார்ப்பு, ஊழியர்களை MOBILE APP மூலம் வருகை பதிவு செய்ய வற்புறுத்துவது, தமிழக தலைமை பொது மேலாளர் அவர்களின் தொழிற்சங்க விரோத போக்கு, உள்ளிட்ட விஷயங்களை விவாதித்தனர். விவரங்கள் இணைப்பில் உள்ளது. 

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

விவரங்கள் காண இங்கே சொடுக்கவும்