BSNLEU மாவட்ட மைய கூட்டத்தில், ஆலோசிக்கப்பட்டதன் அடிப்படையில், வருகிற 02.06.2026 செவ்வாய்க்கிழமை அன்று, சேலம் செவ்வை தொலைபேசி நிலைய, 7வது தளம், கூட்ட அரங்கில், முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது. தோழர் M. சண்முகம், COS., பணி நிறைவு பாராட்டு விழா, சேவை கருத்தரங்கம், மாவட்ட செயற்குழு என முப்பெரும் விழா நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு.
வாருங்கள் தோழர்களே !
சங்க முன்னோடியை பாராட்டுவோம்!
சேவை தரத்தை மேம்படுத்த ஆலோசிப்போம்!!
அமைப்பை பலப்படுத்த விவாதிப்போம், முடிவெடுப்போம்!!!
