Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, May 19, 2026

AUAB சார்பாக மனித சங்கிலி போராட்டம்!


நாள் : 20.05.2026 புதன்கிழமை, 

நேரம் : மதியம் 12  மணியளவில் 

இடம் : பொது மேலாளர் அலுவலகம், சேலம் - 7

01.01.2026 முதல் நாம் பெற வேண்டிய, பஞ்சபடி உயர்வை, வழங்க மறுத்து, Affordability clause, "வழங்கும் சக்தி" என்கிற பிரிவை ஏற்படுத்தி, விஷமத்தனமாக, ஒன்றிய அரசாங்கம், ஒரு உத்தரவை வெளியிட்டது. நாடு முழுவதும், இந்த உத்தரவு வந்த பிறகு, அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கொதித்து எழுந்து போராடியதன் அடிப்படையில், 01.04.2026 முதல் வழங்க வேண்டிய பஞ்சபடி உயர்வு உத்தரவில், அந்த பிரிவு இல்லை. 

ஆனால், 01.01.2026 முதல் வழங்க வேண்டிய உத்தரவில், இன்னும் அந்த பிரிவு நீக்கபட வில்லை. அந்த பிரிவு நீக்கப்பட்டு, மே மாத ஊதியத்தில் நிலுவை வழங்க வலியுறுத்தி, வருகிற 20.05.2026 புதன்கிழமை அன்று, நாடு முழுவதும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், AUAB சார்பாக, மனித சங்கிலி இயக்கம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், நமது சேலம் மாவட்ட AUAB சார்பாக, சேலம் பொது மேலாளர் அலுவலக நுழைவாயிலில் போராட்டம் நடைபெறும். இதே கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக, நமது GM அலுவலகத்தில், 20.05.2026  காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் தர்ணா போராட்டத்திலும் நாம் திரளாக கலந்து கொள்வோம். இரண்டு இயக்கங்களையும், வெற்றி பெற செய்து, நமது கோரிக்கையை வெல்வோம். மே மாத ஊதியத்தில், IDA உயர்வு நிலுவை பெறுவோம்.

தோழமையுடன்,
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர், BSNLEU
R. ஸ்ரீனிவாசன், 
மாவட்ட செயலர், SNEA
V. சண்முகசுந்தரம்,
மாவட்ட செயலர், AIBSNLEA