நாளை, 01.05.2026 வெள்ளிக்கிழமை அன்று, 140வது மே தினத்தை, மாவட்டம் முழுவதும், CoC சார்பாக கொண்டாட தோழமையோடு கேட்டு கொள்கிறோம். கொடி கம்பங்கள் இருக்கும் இடங்களில், மே தின கொடியேற்றி, கம்பங்கள் இல்லாத இடங்களில், வாயிற் கூட்டங்கள் நடத்தி, இனிப்புகள் வழங்கி, மே தினம் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
01.05.2026 அன்று மாலை சேலம் மற்றும் குமாரபாளையத்தில், அனைத்து சங்கங்கள் சார்பாக நடைபெறும் பேரணி மற்றும் பொது கூட்டத்திலும், நமது BSNLEU - AIBDPA - TNTCWU சங்க தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
CoC சேலம்
குறிப்பு:
சேலம் நகர, CoC கிளைகள் சார்பாக, 01.05.2026 அன்று காலை 9 மணி அளவில், கொடி கம்பம் உள்ள, சேலம் செவ்வை தொலைபேசி நிலையத்தில், மே தின கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு வாயிற் கூட்டம் நடைபெறும். BSNLEU - AIBDPA - TNTCWU நகர பகுதி தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.



