Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, April 10, 2026

மாநில தலைமை பொது மேலாளர் அவர்களுடன் சந்திப்பு!


புதியதாக பொறுப்பேற்றுள்ள, CGM., TNC., தமிழ் மாநில தலைமை பொது மேலாளர், திரு V. S. இளந்திரை, ITS., அவர்கள், துறை ரீதியான, கள ஆய்வு பணிக்காக, சேலம் மாவட்டத்திற்கு 09.04.2026 அன்று வருகை புரிந்தார். சேலம் செவ்வை தொலைபேசி நிலையத்தில், நாள் முழுவதும், கள ஆய்வு பணிகளை, சேலம், தர்மபுரி OA பகுதி உயர் அதிகாரிகளுடன், மேற்கொண்டார். மாலை  அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை, மரியாதை நிமித்தமாக சந்திக்க, நேரம் ஒதுக்கினார். BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக அவரை வரவேற்று, மாநில அளவில் தீர்வு காணப்பட வேண்டிய கீழ்க்கண்ட பிரச்சனைகளை சுருக்கமாக, சுட்டிக் காட்டினோம்.

1. 4G சேவை, குரல் அழைப்புகள், Voice calls, குறைபாடுடன் உள்ளதை முதலில் சுட்டிக்காட்டினோம் வாடிக்கையாளர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினோம்.

2. வாடிக்கையாளர் சேவை மையங்கள், outsourcing முறையில் தனியாரிடம் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் BSNL நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் முறையாக வழங்காததால், SDCA அளவில் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் இன்னல்களை எடுத்துரைத்தோம்.

3. மாநில அளவில் செயல்படும் வணிக பிரிவில், Commercial, TN., மாநிலம் முழுவதும் emailலில் அனுப்பும் பிரச்சனைகளுக்கு கூட முறையான தீர்வு காணப்படாததால், high paying prestigious வாடிக்கையாளர்கள் நம்மை விட்டு வெளியேறுவதை, சுட்டிக்காட்டினோம்.

4. CSCயில் CCM, Sancharsoft, Sanchaar Mitra போன்ற மென்பொருளில் உள்ள குறைபாடுகளை விளக்கினோம்.

5. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகை செலுத்தி, மொபைல் பிரிவில் விரும்பும் எண்களை, fancy numbers, தேர்வு செய்யும் வசதி தடைபட்டுள்ளதை சுட்டிக்காட்டினோம்.

6. Outsourced CSCயில் ஒரே மாதிரியான கட்டண முறை, இல்லாத நிலையை விளக்கினோம்.

7. மாநில அளவில் நிதி வழக்குவதில் ஏற்படும் தாமதத்தால், ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பட்டுவாடாவில் ஏற்படும் அதீத கால தாமதத்தை சுட்டிக்காட்டினோம்.

நேரம் குறைவாக இருந்ததால், பிரச்சினைகளை முழுமையாக விவாதிக்க முடியவில்லை. ஆனால் நமது கருந்துக்களை பொறுமையுடன் கேட்டுக்கொண்டார். பிரச்சனைகளை தொகுத்து, விவரமாக கடிதம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். நாமும் மாநில சங்கம் மூலம், பிரச்சனைகளை தொகுத்து, விவரமாக கடிதம் வழங்குவதாக கூறிவிட்டு, வாழ்த்தி விடை பெற்றோம். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் R. ஸ்ரீனிவாசன், K.  சின்னசாமி, C. லாவண்யா, P. சந்திரன், D. பிரசாத், J. ஸ்ரீநிவாசராஜூ, செவ்வை கிளை செயலர் தோழர் N. சிவகுமார், நகரப் பகுதியில் உள்ள முன்னணி தோழர்களோடு, CGM அவர்களை சந்தித்தோம். 

தோழமையுடன்,
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்