BSNLEU சங்கத்தின், துணை அமைப்பான, BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின், வரலாற்றுச் சிறப்புமிக்க 3வது அகில இந்திய மாநாடு, 28.03.2026 அன்று மும்பையில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களிலிருந்து 117 பெண் சார்பாளர்கள் மாநாட்டில் பங்குபெற்றனர். CITU அகில இந்திய உதவி தலைவர் தோழர் டாக்டர் K. ஹேமலதா, முறைப்படி மாநாட்டை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். BSNLEU மத்திய சங்க தலைவர்களின், சிறப்பான வாழ்த்துரைக்கு பின், சார்பாளர் விவாதம் நடைபெற்றது. இறுதியாக, அடுத்த மூன்றாண்டு காலத்திற்கான, புதிய மத்திய குழு, ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
அதன்படி,
மத்திய குழு கன்வீனர்: தோழர் சுலக்னா பாசு, கொல்கத்தா
இணை கன்வீனர்கள்
1) தோழர் அமிதா நாயக், மகாராஷ்டிரா.
2) தோழர் K. ரேகா, கேரளா.
மத்திய குழு உறுப்பினர்கள்
தோழர் மஞ்சுஷா லச்கே, மகாராஷ்டிரா.
தோழர் S. அழகு நாச்சியார், தமிழ்நாடு.
தோழர் பாரதி, கர்நாடகா.
தோழர் ஸ்ரீலட்சுமி, ஆந்திரப் பிரதேசம்.
தோழர் நந்திதா தத்தா, மேற்கு வங்காளம்.
தோழர் கிரண் தாக்கூர், மத்திய பிரதேசம்.
தோழர் மஞ்சு விஸ்வகர்மா, சத்தீஸ்கர்.
தோழர் பாஷா பேகம், சென்னை.
11 தோழர்களை கொண்ட புதிய மத்திய குழுவை, BSNLEU சேலம் மாவட்ட சங்கம், தோழமையோடு வாழ்த்துகிறது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்



