20.04.2026, திங்கட்கிழமை,
மதியம் 1 மணி முதல் 1.45 மணி வரை
சேலம் GM அலுவலகம்
IDA பிரச்சனையின் மீது, 2026 ஏப்ரல் 20ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த, AUAB அறைகூவல்
2026 ஜனவரி முதல் வர வேண்டி IDA பிரச்சனை தொடர்பாக விவாதிக்க, 2026 ஏப்ரல் 8ஆம் தேதி, AUABயின் முக்கியமான கூட்டம், நடைபெற்றது. நீண்ட விவாதங்களுக்கு பின், இந்த மாத ஊதியத்துடன் IDA நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி, 20.04.2026 அன்று, நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என AUAB முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், நமது கவலையை தெரிவிக்கும் வண்ணம் தொலைத்தொடர்பு துறையின் செயலாளர், CMD BSNL மற்றும் DPE ஆகியோருக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை, 20.04.2026 அன்று மாலை நடைபெறும் AUAB கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
AUAB சேலம்

