Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, March 22, 2026

ஒருங்கிணைப்பு குழு, CoC., சார்பாக மாலை நேர தர்ணா!


நாள்: 23.03.2026, திங்கட்கிழமை 

நேரம்: மதியம் 3.30 மணி அளவில் 

இடம்: சேலம் மெயின் தொலைபேசி நிலையம் 


மத்திய, மாநில CoC அறைகூவல் அடிப்படையிலும், சேலம் மாவட்ட CoC முடிவின்படியும் வருகிற 23.03.2026 திங்கட்கிழமை அன்று, மதியம் 3.30 மணி அளவில், சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், நிரந்தர தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது. BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், தோழர்கள், தோழியர்கள், பெருந்திரளாக போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

கோரிக்கைகள்:

1) மூன்றாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமலாக்கு!

2) ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்து!

3) PENSION VALIDATION சட்டத்தை திரும்ப பெறு!

4) NATIONAL MONETISATION PIPELINE 2.O வை கைவிடு!

5) BSNLலில் 2ஆவது விருப்ப ஓய்வு திட்டத்தை கொண்டு வராதே!

6) ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யாதே, முறையான ஊதியம் மற்றும் சமூக நல சலுகைகளை அமுலாக்கு உறுதிப்படுத்து!

7) கேஷுவல் ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை வழங்கிடு.

BSNL நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத  கொள்கைகளுக்கு எதிராக, ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம்.

போராட்ட வாழ்த்துக்களுடன்,
S. தமிழ்மணி,
தலைவர், CoC & 
மாவட்ட செயலர், AIBDPA
S. ஹரிஹரன், 
கன்வீனர், CoC &
மாவட்ட செயலர், BSNLEU 
M. செல்வம்,
இணை கன்வீனர், CoC &
மாவட்ட செயலர், TNTCWU