நிரந்தர ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், BSNL நிறுவன நலன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், 23.03.2026 அன்று தர்ணா போராட்டம் நடத்த, மத்திய, மாநில, CoC கூட்டமைப்பு அறைகூவல் கொடுத்திருந்தது. அதன்படி 23.03.2026 அன்று சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், சேலம் மாவட்ட CoC சார்பாக, மாலை நேர தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது.
போராட்டத்திற்கு, தோழர்கள் R. ஸ்ரீனிவாசன் (BSNLEU), M. மதியழகன் (AIBDPA), P. செல்வம் (TNTCWU) கூட்டு தலைமை பொறுப்பேற்றனர். தோழர் R. ரமேஷ் மாவட்ட பொருளர், BSNLEU அனைவரையும் வரவேற்றார். போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து, தோழர் E. கோபால், மாநில உதவி செயலர், AIBDPA துவக்கவுரை வழங்கினார். அவரை தொடர்ந்து தோழர் M. சண்முகம், மாநில அமைப்பு செயலர், BSNLEU, தோழர் S. அழகிரிசாமி, மாநில அமைப்பு செயலர், AIBDPA கருத்துரை வழங்கினார்கள்.
அவர்களை தொடர்ந்து தோழர் M. செல்வம், மாவட்ட செயலர், TNTCWU மற்றும் தோழர் S. தமிழ்மணி, மாவட்ட செயலர், AIBDPA ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர், BSNLEU நிறைவுரை வழங்கினார். தோழர் P. தங்கராஜு, மாவட்ட பொருளர் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
விண்ணதிரும் கோரிக்கை முழக்கங்களை, தோழர் P. செல்வம், ADS., TNTCWU எழுப்பினார். மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 80க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள், இயக்கத்தில் கலந்து கொண்டனர். எழுச்சியாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும், அதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்ட, BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள், ஆகியோருக்கு சேலம் மாவட்ட CoC சார்பாக, நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
























