2001ல் இதே நாளில், விசாகபட்டணத்தில், 7 கேடர் வாரியான சங்கங்களை ஒருங்கிணைத்து, BSNL எம்ப்ளாயீஸ் யூனியன் என்கிற நமது பேரியக்கத்தை துவக்கினோம். அரசாங்கத்தின் பிற்போக்கான தேச விரோத, நிறுவன விரோத, ஊழியர் விரோத, கொள்கைகளை சமரசமின்றி எதிர்த்து போராடி வருகிறோம். இன்று வரை BSNL நிறுவனத்தின், 100 சதவீத பங்குகள் அரசிடமே உள்ளது. அதற்கு அடிப்படை காரணம், BSNLEU சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டங்கள் தான்.
01.10.2000 முதல் CDA சம்பள விகிதத்தில் இருந்து IDA சம்பள விகிதத்திற்கு மாற்றம், 01.01.2007 முதல் சிறப்பான ஊதிய மாற்றம், 01.01.2017 முதல் மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம், 01.10.2000 முதல் NEPP என்கிற புதிய பதவி உயர்வு கொள்கை, 60:40 பங்களிப்பை முறியடித்து, 100 சதவீத அரசாங்க பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியம், 78.2 சதவீத பஞ்சபடி இணைப்பு, என எண்ணற்ற ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை, ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பெற்று கொடுத்ததால் தான், நாடு முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற கடந்த 8 தேர்தல்களிலும், BSNL ஊழியர்கள், BSNLEU சங்கத்தை, முதன்மை சங்கமாக அங்கீகரித்து வருகிறார்கள்.
சமரசமற்ற போராட்ட இயக்கங்களும், சாதனை பயணங்களும், தொடரட்டும்! என அனைவருக்கும் வெள்ளி விழா ஆண்டு அமைப்பு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
