Ex servicemen Security Services என்கிற ஒப்பந்ததாரர், நமது சேலம் மாவட்டத்தில், கடந்த 2018 முதல் 2022 வரை 47 மாதங்கள் INFRA பகுதிக்கு, ஒப்பந்ததாரராக இருந்தார். ஊழியர்களுக்கு முறையாக, ஊதியம் பட்டுவாடா செய்யாமல் கடுமையான கால தாமதம் ஏற்படுத்தினார். BSNLEU சேலம் மாவட்ட சங்கம் நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், பலனில்லை. பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் நியாயம் கிடைக்கவில்லை. நீதி மன்றம் சென்றோம். நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு பெற்றும், முழுமையான ஊதிய நிலுவை தொழிளாளிக்கு வந்து சேரவில்லை. மாநில சங்க வழிகாட்டுதல் அடிப்படையில், கடந்த 28.08.2024 அன்று RLC (C) அவர்களிடம் SAMADHAAN இணையத்தில் புகார் அளித்தோம். வழக்கு விசாரணைக்கு வராமலேயே, நமக்கு பாதகமாக தீர்ப்பு வந்தது. மீண்டும் கடந்த 18.11.2025 அன்று வழக்கு தொடுத்தோம்.
26.03.2026 அன்று, முதல் விசாரணைக்கு, வழக்கு தொடுத்த சங்கம் என்கிற முறையில் BSNLEU சேலம் மாவட்ட சங்கம் ஆஜராக சம்மன் வந்திருந்தது. அதன் அடிப்படையில், சென்னை நுங்கம்பாக்கம், ஹேடோஸ் சாலையில் உள்ள, சாஸ்திரி பவன் அலுவலகத்தில் அமைந்துள்ள, மத்திய மண்டல தொழிலாளர் ஆணையர் உயர்திரு H. ராமானுஜம் அவர்களிடம், BSNLEU சேலம் மாவட்ட செயலர் நேரடியாக ஆஜரானார். தோழர்கள் M. செல்வம், மாவட்டச் செயலர், TNTCWU மற்றும் தோழர் C. பாஸ்கர் மாநில பொருளர் உடன் வந்தனர். நிர்வாக தரப்பில், BSNL சேலம் மாவட்ட CAO(F) வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். ஒப்பந்ததாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.
எனவே வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, என்பதை தகவலாக தெரிவித்துக் கொள்கிறோம். நிச்சயமாக தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, BSNLEU - TNTCWU சேலம் மாவட்ட சங்கங்கள் தொடர்ந்து போராடும்.




