BSNLEU சங்கத்தின் அமைப்பு தினம், வருகிற ஞாயிற்றுக்கிழமை, 22.03.2026 விடுமுறை அன்று வருவதால், 20.03.2026 அன்று, நமது மாவட்டத்தில், அனைத்து கிளைகளிலும், CoC சார்பாக, வெள்ளி விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மாநகரத்தில், சேலம் மெயின் கிளை, சேலம் செவ்வை கிளை, சேலம் GM அலுவலக கிளை, ஊரக பகுதியில் திருச்செங்கோடு, ஆத்தூர், பரமத்தி வேலூர், நாமக்கல், ராசிபுரம், ஓமலூர் மற்றும் எடப்பாடி என 10 மையங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று உள்ளது. ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, மாவட்ட சங்க நோட்டீஸ் கொடுத்து, வாயிற் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
உற்சாகமாக, வெள்ளி விழா கொண்டாட்டங்களை நடத்திய, BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தோழர்களுக்கும், சேலம் மாவட்ட CoC சார்பாக புரட்சிகரமான வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாநில CoC முடிவின் அடிப்படையில், மாநில சங்க செய்தியை, சாதனை பட்டியலை, flex banner மூலம் விளம்பரப்படுத்திய, ஆத்தூர், சேலம் GM அலுவலக, திருச்செங்கோடு கிளைகளுக்கு, பாராட்டுக்கள். வெள்ளி விழாவை கேக் வெட்டி கொண்டாடிய, சேலம் செவ்வை கிளைக்கும், பாராட்டுக்கள்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
கன்வீனர், CoC
சேலம் மாவட்ட சங்க நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்
சேலம் மெயின்

































































