BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு, CoC கூட்டம், இணைய வழியில், 18.03.2026 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் S. தமிழ்மணி, தலைவர், CoC, தலைமை தாங்கினார். கூட்டத்தின் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி தோழர் S. ஹரிஹரன், ஒருங்கிணைப்பாளர், விளக்கவுரை வழங்கினார்.
14.01.2026 CoC கூட்டத்திற்கு பின் நடைபெற்ற இயக்கங்கள் சம்மந்தமான பரீசீலனை, 24.01.2026 சிறப்பு கருத்தரங்கம், 12.02.2026 வேலை நிறுத்தம், 07.03.2026 BSNLCCWF டில்லி கருத்தரங்கம், 08.03.2026 மத்திய CoC கூட்ட முடிவுகள், 17.03.2026 இணைய வழி BSNLEU - AIBDPA - TNTCWU இணைந்த தமிழ் மாநில செயற்குழு முடிவுகள் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், CoC அமைப்பின் தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரோடு, BSNLEU சார்பாக தோழர்கள் R. ஸ்ரீனிவாசன், R. ரமேஷ், M. சண்முகம், AIBDPA சார்பாக தோழர்கள் M. மதியழகன், P. தங்கராஜு , E. கோபால், S. அழகிரிசாமி, TNTCWU சார்பாக சார்பாக தோழர்கள் V. குமார், C. பாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விவாதத்திற்கு பின், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1. BSNLEU சங்கம் துவங்கி, 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதால், ஆண்டு முழுவதும் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடத்துவது. 20.03.2026 அன்று மாநில சங்கம் வடிவமைக்கும், சாதனை விளக்க FLEX BANNER அனைத்து கிளைகளிலும் வைப்பது, ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, கொடி கம்பம் இருக்கும் இடங்களில், கொடி ஏற்றி, வாயிற் கூட்டம் நடத்தி கொண்டாடுவது.
2. 23.03.2026 அன்று, CoC சார்பாக, சக்தி மிக்க மாலை நேர தர்ணா போராட்டத்தை, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடத்துவது.
3. BSNLCCWF சம்மேளன, போராட்ட அறைகூவல் அடிப்படையில், சேலம், ஆத்தூர், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் என நான்கு மையங்களில் பெருவாரியான ஒப்பந்த ஊழியர்களை திரட்டி, CoC சார்பாக, 25.03.2026 அன்று, கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடத்துவது, மாவட்டம் முழுவதும் கோரிக்கை அட்டை அணிவது.
CoC அமைப்பின் இணை கன்வீனர், தோழர் M. செல்வம், நன்றி கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார்.

