Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, February 1, 2026

TNTCWU சேலம் மாவட்ட செயற்குழு முடிவுகள்!

 



TNTCWU சேலம் மாவட்ட சங்க செயற்குழு கூட்டம், BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில், நேற்று (31.01.2026) சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் P. செல்வம்,  மாவட்ட உதவி செயலர் தலைமை தாங்கினார். தோழர் A. சிவந்தன் ஆத்தூர் கிளை செயலர், அஞ்சலியுரை நிகழ்த்த, சேலம் நகர கிளை செயலர் தோழர் A. ஜெய் சங்கர் அனைவரையும் வரவேற்றார்.

AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். TNTCWU தமிழ் மாநில சங்கம் சார்பாக, தோழர் C. பாஸ்கர், மாநில பொருளர், மாநில சங்க செயல்பாடுகளை விளக்கிப் பேசினார். குறிப்பாக, 29.01.2026  அன்று சென்னை RLC அவர்களை மாநில சங்கம் சார்பாக சந்தித்ததன் விவரங்களை விளக்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் M. செல்வம் மாவட்ட செயலர் அறிமுகவுரை வழங்கினார். ஆய்படு பொருள் மீதான விவாதத்தில், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.

BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் S. ஹரிஹரன், சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில், BSNLEU சேலம் மாவட்ட சங்கம் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளில் எடுத்திருக்கும் நடவடிக்கைகள், ஊதிய நிலுவை சம்பந்தமான தற்போதைய நிலை, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதற்கான ஏற்பாடுகள் என, பல விஷயங்களை விளக்கிப் பேசினார். AIBDPA தமிழ் மாநில உதவி செயலர் தோழர் E. கோபால் விவாதத்தில் எழுப்பப்பட்ட பிரச்சனைகளில் CoC சார்பாக எடுக்கப்பட்ட வரும் நடவடிக்கைகள், அமைப்பு சார்பு நிலைபாடு, எதிர்கால கடமைகள் உள்ளிட்ட விஷயங்களை, விளக்கி பேரூரையாற்றினார்.

விவாதத்திற்கு பதில் அளித்து, மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கிய பின், கீழ்க்கண்ட முடிவுகள் ஏகமானதாக எடுக்கப்பட்டது.

1. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் 12.02.2026 அன்று நடைபெறும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில், ஒப்பந்த ஊழியர்கள் முழுமையாக கலந்து கொள்வது.

2. வேலை நிறுத்தம் அன்று சேலம் மற்றும் நாமக்கலில், மத்திய சங்கங்கள் சார்பாக நடைபெறும் மறியலில் பெருமளவு கலந்து கொண்டு, கைதாவது.

3. மார்ச் மாதத்தில் நடைபெறும் டெல்லி கருத்தரங்கில், சேலம் மாவட்ட சங்கம் சார்பாக தோழர்கள் கலந்து கொள்வது.

4. ஒப்பந்த  ஊழியர்களின் பணியை பாதுகாக்க, தொடர்ந்து இயக்கம் காண்பது

5. OFC மற்றும் STR பகுதி தோழர்களின் பணியை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது.

6. வரும் 10.02.2026 க்குள், ஊழியர்களிடமிருந்து வங்கி பரிவர்த்தனை பட்டியல் பெறுவது.

7. புதிய டெண்டர் அமல்படுத்த கால தாமதம் ஏற்பட்டால், பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் தள மட்ட போராட்டம் நடத்துவது.

8. ஊதிய நிலவை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வது.

9. புதிய டெண்டரில், EPF/ESI சலுகைகளை உறுதிப்படுத்துவது

10. உறுப்பினர்களிடம் சந்தா தொகையை பெற்று, கிளை சங்கங்கள்  உடனடியாக மாவட்ட சங்கத்திற்கு, அனுப்பி வைக்க வேண்டும்.

11. CoC சார்பாக நடத்தப்படும் இயக்கங்களில், TNTCWU தோழர்கள் முழுமையாக கலந்து கொள்வது.

தோழர் V. குமார், மாவட்ட பொருளர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
M. செல்வம்,
மாவட்ட செயலர்