CoC சார்பாக, சேலம் நகர கிளைகளை இணைத்து, 03.02.2026 அன்று, சேலம் GM அலுவலகத்தில், வேலை நிறுத்த ஆயத்த கூட்டம், அசத்தலாக நடைபெற்றது. கூட்டத்திற்கு, GMO கிளை தலைவர் தோழர் R. லோகநாதன் தலைமை தாங்கினார். தோழியர் K. அமுதா அஞ்சலியுரை நிகழ்த்த, தோழர் J. சீனிவாசராஜூ வரவேற்புரை வழங்கினார். சிறப்பு கூட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து, தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் துவக்கவுரையாற்றினார். தோழர் S. ஹரிஹரன் மாவட்ட செயலர், வேலை நிறுத்த நோக்கத்தை விளக்கி, நடைபெற்ற ஊழியர் சந்திப்பு இயக்கம் உள்ளிட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி, வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்து, சிறப்புரையாற்றினார்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் D. பிரசாத், தோழியர் C. லாவண்யா, தோழர் P. சந்திரன் செவ்வை கிளை செயலர் தோழர் N. சிவக்குமார் மெயின் கிளை செயலர் தோழர் C. மாணிக்கம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தோழியர் D. கவிதா, மாநிலக்குழு, BSNLWWCC வாழ்த்துரை வழங்கினார். GM அலுவலக கிளை சார்பாக தோழர்கள் R. சங்கர், N. பாலகுமார், M. அருண்குமார், S. கலைச்செல்வி, V. அஞ்சலம் ஆகியோர், விவாதத்தில் பங்குபெற்று, வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய, தங்கள் பங்களிப்பை உறுதி செய்தனர். தோழர் E. கோபால், ACS., AIBDPA இறுதியாக நிறைவுரையாற்றினார். அவர் தம் உரையில், ஒன்றிய அரசின் பிற்போக்கான கொள்கைகள், BSNL அரங்கில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொகுப்புகள், அதன் ஆபத்துகள், ஓய்வூதிய மாற்றம் என பல விஷயங்களை விளக்கி பேசினார்.
TNTCWU மாவட்ட பொருளர் தோழர் V. குமார், கூட்டத்தில் கலந்து கொண்டார். GM அலுவலக கிளை நிர்வாகி தோழர் S. ராஜா நன்றி கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள், வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய சபதம் ஏற்றனர். சிறப்பான ஏற்பாடுகளை செய்த BSNLEU GM அலுவலக கிளையை, CoC சார்பாக பாராட்டுகிறோம்.


























