Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, February 1, 2026

ஊழியர் சந்திப்பு இயக்கம்!


31.01.2026 அன்று சேலம் நகர கிளைகளில், ஊழியர்களை நேரில் சந்தித்து, வேலை நிறுத்த ஆதரவு கோரப்பட்டது. சேலம் மெயின், சேலம் GM அலுவலகம், சேலம் செவ்வை கிளைகளில், ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது. நமது தோழர்களை நேரில் சந்தித்து, வேலை நிறுத்தம் சம்பந்தமான அவர்களின் கேள்விகளை உள்வாங்கி, அதன் மீதான நமது சங்கத்தின் நிலைபாடுகளை விளக்கி, வேலை நிறுத்த ஆதரவு இயக்கம் நடத்தினோம். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் R. ஸ்ரீனிவாசன், J. ஸ்ரீனிவாச ராஜு, P. சந்திரன் இயக்கத்தில் கலந்து கொண்டனர். சேலம் மெயின் கிளை செயலர் தோழர் C. மாணிக்கம் இயக்கத்தில் கலந்து கொண்டார்.

தோழமையுடன்,
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்

சேலம் மெயின் 



சேலம் GM அலுவலகம் 










சேலம் செவ்வை