ஊழியர்களுக்கான ஊதிய உடன்பாடு தொடர்பாக, ஒரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா, 12.02.2026 அன்று, PGM (SR) திரு ராஜிவ் கவுசிக் அவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது, ஊழியர்களுக்கான ஊதிய உடன்பாட்டை, BSNL இயக்குனர் குழு அங்கீகரித்துள்ளதாக, அதிகார பூர்வமாக உறுதி செய்தார். நமது நீண்ட, உறுதியான போராட்டத்தில், நாம் ஒரு படி முன்னேறி உள்ளோம் என்பதை இது குறிக்கிறது. அடுத்த கட்டத்தில் நாம், தொலைத்தொடர்புத் துறை மற்றும் அரசாங்கத்தின் ஒப்புதலை பெற வேண்டி உள்ளது. அவர்களின் ஒப்புதலுக்குப் பின் தான், இந்த உடன்பாடு அதிகார பூர்வமாக அமலாக்கப்படும்.
இதற்கு விரைவில் அரசாங்கத்தின் ஒப்புதல் பெறுவதை உறுதி செய்ய, நாம் நமது முயற்சிகளை தீவிரப்படுத்தி, நமது ஒன்றுபட்ட போராட்டங்களை தொடர்வது தான் இன்றைய தேவை. நமது ஒற்றுமை, உறுதி மற்றும் விடாப்பிடியான அழுத்தம் ஆகியவை மட்டுமே, BSNL ஊழியர்களுக்கு, நியாயத்தை பெற்று தரும். விரைவில் நடைபெற உள்ள AUAB கூட்டத்தில், விரிவாக விவாதிக்கப்பட்டு, இந்த பிரச்சனையின் மீது, எதிர்கால நடவடிக்கை தொடர்பாக, இறுதி செய்யப்படும்.
தோழர் அனிமேஷ் மித்ரா, பொதுச் செயலாளர், BSNLEU
