Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, February 12, 2026

மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!


இன்று (12.02.2026) நாடு முழுவதும், சுமார் 25 கோடி தொழிலாளர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றதாக, முதல் நிலை தகவல்கள் வருகிறது. நமது BSNL நிறுவனத்தில், நாடு முழுவதும், Non Executive ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் கணிசமான எண்ணிக்கையில், கலந்து கொண்டுள்ளனர். நமது சேலம் மாவட்டத்தில், பாராட்டும் விதமான எண்ணிக்கையில், BSNLEU உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றுள்ளனர். அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். நெஞ்சு நிறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக, சேலம் மற்றும் நாமக்கலில் நடைபெற்ற சாலை மறியலில், BSNLEU - AIBDPA - TNTCWU சங்க தோழர்கள், திரளாக, CoC சார்பாக பங்கேற்றுள்ளனர். நாமக்கலில் சுமார் 100 தோழர்களும், சேலத்தில் சுமார் 50 தோழர்களும் சிறை நிரப்பும் போராட்டத்திலும், கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. வேலை நிறுத்தம், சாலை மறியல், சிறை நிரப்பும் போராட்டங்களில் கலந்து கொண்ட, BSNLEU - AIBDPA - TNTCWU சங்க தோழர்களுக்கு, CoC சார்பாக புரட்சிகர நல்வாழ்த்துக்களை  உரித்தாக்கி கொள்கிறோம்.

சேலம் மெயின் CSC நுழைவு வாயிலில் நடைபெற்ற, வேலை நிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கும், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
S. ஹரிஹரன்,  
கன்வீனர், CoC