இன்று (30.01.2026) ஓமலூர், மேட்டூர், மெய்யனூர் கிளைகளில், ஊழியர் சந்திப்பு இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது. நமது தோழர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி, அதன் மீதான நமது சங்கத்தின் நிலைபாடுகளை விளக்கி, வேலை நிறுத்த ஆதரவு இயக்கம் நடத்தினோம்.
BSNLEU சார்பாக மாநில அமைப்பு செயலர் தோழர் M. சண்முகம், மாவட்ட தலைவர் தோழர் R. ஸ்ரீனிவாசன் மூன்று கிளைகளுக்கும் வருகை புரிந்தனர். ஓமலூரில் கிளை செயலர் தோழர் S. சமரன் அவர்களும், மேட்டூரில் கிளை செயலர் தோழர் M. கோபாலன், மாவட்ட சங்க நிர்வாகி தோழர் J. மணி, மெய்யனூரில் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் P. சந்திரன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
AIBDPA சார்பாக தோழர் E. கோபால், மாநில உதவி செயலர் இயக்கத்தில் கலந்து கொண்டு, மூன்று கிளைகளுக்கும் வருகை புரிந்து, ஊழியர்கள் மத்தியில் வேலை நிறுத்த ஆதரவு பிரச்சாரத்தை சிறப்பாக மேற்கொண்டார்.
















