தேங்கியுள்ள பல ஊழியர் பிரச்சனைகள் தொடர்பாக, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா , கார்ப்பரேட் அலுவலகத்தின் PGM (ESTT) திரு S.P.சிங் அவர்களிடம், 19.01.2026 அன்று விவாதித்தார். தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்ட போதும், விளையாட்டு வீரர்களுக்கான பதவி உயர்வு பிரச்சனை, இன்னமும் கார்ப்பரேட் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது என்று வினா எழுப்பினார். அதற்கு பதில் அளித்த PGM (ESTT), மேல் நடவடிக்கைகளுக்காக, அந்த கோப்பு உயர் அதிகாரிகளிடம் அனுப்பப்படும் என உறுதி அளித்தார்.
கேஷுவல் ஊழியர்களுக்கு DA வழங்குவது தொடர்பாக, தேவையான நடவடிக்கைகளுக்காக, அதற்கான கோப்பு ஏற்கனவே DIRECTOR (FINANCE)க்கு அனுப்பப்பட்டு விட்டதாக S.P.சிங் தெரிவித்தார். DEPUTATION TRANSFER பிரச்சனை தொடர்பாக, தற்போது உ. பி.(மேற்கு) மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டுள்ள, சில JEக்களின் DEPUTATION காலம் நீட்டிக்க பட வேண்டும் என, பொதுச் செயலாளர் வலியுறுத்தினார். மேலும் சில வழிகாட்டுதலுக்காக, DIRECTOR (HR)உடன் இந்த பிரச்சனையை விவாதிப்பதாக, PGM (ESTT) உறுதி அளித்தார்.
தோழர் அனிமேஷன் மித்ரா, பொதுச் செயலர், BSNLEU
