Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, January 20, 2026

ஊதிய உடன்பாடு - தற்போதைய நிலை!


16.01.2026 அன்று, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் உதவி பொதுச் செயலாளர் தோழர் அஸ்வின் குமார் ஆகியோர், திரு ராஜீவ் குமார் கௌசிக் PGM (SR) அவர்களை சந்தித்தனர்.  PGM (PERS) அவர்களிடம் விவாதித்த போது, ஊதிய உடன்பாட்டிற்கு, உரிய மட்டங்களில் ஒப்புதல் வழங்குவது தொடர்பாக, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது. நிர்வாக குழுவின் ஒப்புதலை தொடர்ந்து, REMUNERATION குழுவும் தனது ஒப்புதலை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  மேலும், இந்தப் பிரச்சனை தொடர்பான அனைத்து ஆவணங்களும், இயக்குனர் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள, இயக்குனர் குழு கூட்டத்தில், இந்த பிரச்சனை எடுக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படும் என ஊழியர் தரப்பு ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளது.

தோழர் அனிமேஷ் மித்ரா, பொதுச் செயலாளர், BSNLEU