BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்களின், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு, CoC கூட்டம், BSNLEU சங்க அலுவலகத்தில், இன்று (14.01.2026) நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் S. தமிழ்மணி, CoC தலைவர், தலைமை தாங்கினார். CoC கன்வீனர், தோழர் S. ஹரிஹரன், கூட்டத்தின் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, விளக்கவுரை வழங்கினார். CoC இணை கன்வீனர், தோழர் M. செல்வம், விவாதத்தை துவக்கி வைத்தார். CoC உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
விவாதத்திற்கு பின், கீழ்க்கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டது.
1. மாநில CoC முடிவின் அடிப்படையில், தோழர் S. செல்லப்பா, AGS., BSNLEU கலந்து கொள்ளும், ஊதிய மாற்ற ஒப்பந்த விளக்க சிறப்பு கருத்தரங்கத்தை, சேலம் செவ்வை தொலைபேசி நிலைய, 7வது மாடி கூட்ட அரங்கில், 24.01.2026 அன்று, சக்திமிக்கதாக, நடத்துவது.
2. BSNLEU - AIBDPA - TNTCWU, மூன்று சங்கங்கள் சார்பாக, தோழர்களை திரளாக திரட்டுவது. (BSNLEU - 70, AIBDPA - 30, TNTCWU - 20)
3. 12.02.2026 ஒரு நாள் வேலை நிறுத்த ஆயத்த சிறப்பு கூட்டத்தை, CoC சார்பாக, ஆத்தூர், திருச்செங்கோடு, நாமக்கல் மற்றும் சேலம் என நான்கு மையங்களில் நடத்துவது.
4. AIBDPA, TNTCWU மாவட்ட செயற்குழுக்களை, இந்த மாத இறுதிக்குள் நடத்துவது.
5. 12.02.2026 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய, BSNLEU தோழர்கள் மத்தியில், கூட்டாக ஆதரவு திரட்டுவது. AIBDPA, TNTCWU தோழர்கள் பெருமளவு மறியலில் கலந்து கொண்டு கைதாவது.
6. BSNLCCWF டெல்லி கருத்தரங்கிற்கு, BSNLEU, AIBDPA மாவட்ட சங்கங்கள் சார்பாக, கருத்தரங்கிற்கு செல்லும் TNTCWU தோழர்களுக்கு நிதி உதவி செய்வது.
7. FCPA சார்பாக, 24.01.2026 மாலை, ஈரோட்டில் நடைபெறும், சிறப்பு கருத்தரங்கிலும், AIBDPA தோழர்கள் கலந்து கொள்வது.



